அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.
உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெல்ல போவது யார் ? ஜோ பைடனா ? அல்ல அமெரிக்கா அதிபரா ? அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் வரப் போகிறார்கள் ? என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவானது பிளவு பட்டு இருக்கிறது. கருப்பினத்தவர், வெள்ளை இனத்தவரிடையேயான பிரிவு அதிகரித்திருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் தீவிர வலதுசாரியாக கருதப்படுகிறார். டிரம்ப் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றார். இந்த தேர்தல் டிரம்ப்பின் நான்கு ஆண்டு ஆட்சிக்கான ஒரு தீர்ப்பாக இந்த தேர்தல் கவனிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்துமே ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்று கூறிவந்தன.
ஜோ பைடனுக்கு 53 சதவீத வாக்குகளும், டிரம்ப்புக்கு 42 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் அனைத்துமே கூறிவந்தனர். தற்போது கூட ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். தேர்தல் சபை வாக்குகளின் அடிப்படையில் 129 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். 108 வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தேர்தல் சபை வாக்குகள் இருக்கின்றன. எந்த மாநிலத்தில் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ ? அந்த தேர்தல் சபை முழுவதும் அந்த வேட்பாளருக்கு செல்கிறது.
அந்த அடிப்படையில் தற்போது வரை தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன். ஆனால் இறுதி முடிவுகள் இப்படித்தான் இருக்குமா ? என்று நாம் கூற முடியாது. ஏனென்றால் மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். பேட்டில் கிரவுண்ட் ஸ்டேட்ஸ், ஸ்விங் ஸ்டேட் என்று சொல்வார்கள். அதாவது போட்டி நிறைந்த மாநிலங்கள். வழக்கமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்காமல் மாறி மாறி வாக்களிக்கக் கூடிய மாநிலங்கள். இதில் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதால் இறுதி முடிவு மாறக்கூடும் என தெரிகின்றது.