Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: கலிபோர்னியாவில் வென்றார் ஜோ பைடன் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார்.

கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய அந்த மாநிலத்தில் வெற்றியை உறுதி செய்வதன் மூலமாக தொடர்ந்து தேர்தல் சபைகளில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.  குடியரசு கட்சி சார்பில் போட்டியிட கூடிய அதிபர் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து இருக்கிறார்.

இருந்த போதிலும் கூட பேட்டில் கிரவுண்ட் ஸ்டேட் என்று சொல்லக்கூடிய முடிவைத் தீர்மானிக்க கூடிய பெரும்பாலான முக்கிய மாநிலங்களில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். வாக்குகளின் அடிப்படையில் பேட்டில் கிரவுண்ட் ஸ்டேட்ஸ் பொருத்தவரை புளோரிடா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களும் மிக முக்கிய மாக கருதப்படு கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் கூட தொடர்ச்சியாக டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

 

Categories

Tech |