Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மீண்டும் அதிபராகும் ட்ரம்ப்….. முக்கியமான 2மணி நேரம்…. தீர்மானிக்கும் மாநிலங்கள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப்  மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வருக்கின்றார்.

டிரம்ப் முன்னிலை வகுக்கும் மாநிலம்:

38தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்சாஸ்ஸில் டிரம்ப் 52% வாக்குகளை பெற்றுள்ளார்.

29 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட புளோரிடாவில் டிரம்ப் 51.3% வாக்குகளை பெற்றுள்ளார்.

16தேர்தல் சபை வாக்குகளை கொண்ட ஜார்ஜியாவில் டிரம்ப் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார்.

20தேர்தல் சபை வாக்குகளை கொண்ட பென்சில்வேனியாவில் டிரம்ப் 56.2% வாக்குகளை பெற்றுள்ளார்.

18தேர்தல் சபை வாக்குகளை கொண்ட ஓஹியோவில் டிரம்ப் 53.4% வாக்குகளை பெற்றுள்ளார்.

16தேர்தல் சபை வாக்குகளை கொண்ட மிச்சிகனில் டிரம்ப் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார்.

10தேர்தல் சபை வாக்குகளை கொண்ட விஸ்கான்சின்னில் டிரம்ப் 51.8% வாக்குகளை பெற்றுள்ளார்.

என தொடர்ச்சியாக எந்தெந்த மாநிலங்கள் எல்லாம் முடிவை தீர்மானிக்கின்றதோ அந்த பெரும்பாலான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். அந்தந்த மாநிலங்களில் இருந்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதன் காரணமாகவே தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப் பின்தங்கி இருக்கிறார்கள்.

Categories

Tech |