Categories
மாநில செய்திகள்

விவசாய இலவச மின் வினியோக நேரம்… இன்று முதல் மாற்றம்… மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின் வினியோக நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயம் செய்வதற்காக மின்சார வாரியம் மும்முனை இலவச மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதிலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். விவசாயத்திற்காக தினம்தோறும் 6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இலவச மின்சாரம் வழங்க கூடிய நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். பிற மாவட்டங்கள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் பிரிவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரண்டாவது பிரிவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |