Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகக்குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் பருவமழை, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படுகின்றன.

கடந்த மாதம் அக்டோபர் 29ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சனல் பொருள்களில் கட்டாய பேக்கேஜிங் செய்வதற்கான விதிமுறைகள் நீட்டிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உணவு தானியங்களில் 100% மற்றும் 20 சதவீத சர்க்கரை ஆகியவற்றை பன்முகப்படுத்தப்பட்ட சணல் பைகளில் அடைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |