Categories
தேசிய செய்திகள்

என் மனைவியை அனுப்புங்க…. மாமியார் வீட்டை கொளுத்திய மருமகன்….!!

மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மும்பையில் சேர்ந்தவர் ராகுல் சங்கர் இவர் தனது மனைவியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆரத்தி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மிகுந்த கோபம் கொண்ட ராகுல் நன்றாக மது அருந்திவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர்.

இதில் கோபமடைந்த ராகுல் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டார். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்ததோடு ஆரத்தி அவரது தாய் மற்றும் சகோதரர்களுக்கு தீ காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |