Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் கொரோனா முகாம்… பயணிகளுக்கு பரிசோதனை… தொடங்கி வைத்த நகராட்சி ஆணையர்…!!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடத்தப்பட்டது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. அந்த முகாமை நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி மற்றும் நகராட்சி மேலாளர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பிறகு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனையின் முதற்கட்டமாக காய்ச்சல் இருப்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் மூலமாக வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சுகாதார ஆய்வாளர் கணேசன், பன்னீர்செல்வம் மற்றும் மேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Categories

Tech |