Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் ? முதல்வர் திடீர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு முடிவை மாற்றி  எடுக்க வேண்டும். பள்ளிகளை இப்போதைக்கு திறக்கக் கூடாது என்றெல்லாம் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் தரப்பில்  வேண்டுகோள்  விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பள்ளிகளை இப்போது திறக்கலாமா ?திறந்தால் எந்த மாதிரி நடவடிக்கையை மேற் கொள்ளலாம். அல்லது பள்ளி திறப்பை இப்போதைக்கு வேண்டுமா ? என்றெல்லாம் முடிவுகள் எடுக்கபட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |