சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டன் நகரில் போன சனிக்கிழமையன்று காலை சிறுமி ஒருவர் வாலிபரிடம் தனியாக இருந்ததை கண்ட பெண் தன்னிடம் இருந்த ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வாலிபரிடம் சத்தமாக நீ யார்? இந்த சிறுமியை எங்கே கூட்டி செல்கிறாய்? என்று கேட்டதற்கு அந்த வாலிபர் இவர் என்னுடைய உறவினரின் மகள் என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். ஆனாலும் அந்தப் பெண் அவரரை விடாமல் பின் தொடர்ந்து அந்த சிறுமியிடம் நீ ஏன் இவருடன் செல்கிறாய்? நன்றாக இருக்கிறாயா? என்று கேட்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி அதற்கு எந்த பதிலும் கூறாததால் அந்தப் பெண் உடனடியாக அந்த வாலிபரின் பக்கத்தில் சென்றதால் அவர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இதனால் சிறுமி என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி என்று அழுது கொண்டு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து துணிச்சல் மிக்க அந்தப் பெண் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை கடத்திய வாலிபர் தானாக வந்துவிட வேண்டும்.
அப்படி வராவிட்டால் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபரின் பெயர் கார்டியன் நெல்சன்(26) என்று காவல்துறையினர் அவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நபர்தான் சிறுமியை கடத்தியது என்பது உறுதியானவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறுமியின் முகம் தெரிவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எதையும் மக்கள் சமூகவலைதளத்தில் பகிர வேண்டாம். இது சிறுமியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.