Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இருந்த போதிலும் கூட, மிக முக்கியமான மூன்று மாநிலங்களில் அதிபர் டிரம்ப் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அந்த எண்ணிக்கையில் ஜோ பைடன்  முந்துவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் என இந்த மூன்று மாநிலங்களில் 46 தேர்தல் சபை வாக்குகள் இருக்கின்றன. அந்த 46 தேர்தல் சபை வாக்குகள் என்பது அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.ஜோ பைடன் தபால் வாக்குகளில் முந்துவார் என்ற காரணத்தினால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட போவதாக மிக முக்கியமான ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார்.

தேர்தல்  வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும்,  இந்த தேர்தல் மிகப் பெரிய சதி என்றும், மிகப்பெரிய மோசடி என்று மிகப் பெரிய குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்திருக்கிறார். தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |