அழகிய புருவத்தை பெற ஒரு சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
அழகிய முகத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம். முகத்தில் உள்ள புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருமையாக இருப்பது, ஒரு சிலருக்கு மரபுவழியில் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். அநேக பெண்களுக்கு, மற்றவர்கள் போல் புருவம் இல்லையே என கவலை அதிகம் இருக்கும். அதனால் இனிமேல் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக சிறிது நேரம் ஒதிக்கினால், அடர்த்தியான புருவங்களை எளிதில் பெற முடியும். அவ்வாறு பெற வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எளிய முறையில் ஒரு சில டிப்ஸ்களை காணலாம்.
விளக்கெண்ணெய்:
புருவம் அடர்த்தியாக வளர, விளக்கெண்ணெய் ஒரு சிறந்த வழி என எல்லோருக்கும் தெரியும். இந்த விளக்கெண்ணெய்யுடன், ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் பலமடங்கு எளிதில் வளர துணை புரியும். ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயுடன், 1 1/2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து எடுத்து சிறிது சூடாக்கி எடுத்து தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தொட்டு, இரண்டு புருவங்களிலும் தடவி நன்கு மசாஜ் செய்து கொள்ளவும், பின்பு அதனை 10 அல்லது 15 நிமிடங்கள் வரை நன்கு ஊறவைக்கவும். இப்படி தினமும் செய்துவந்தால், புருவத்தில் உள்ள முடியானது சிறிது, சிறிதாக வளர்ச்சி அடையும்.
எண்ணெய்க் கலவையுடன், சிறிதளவு துளசியிலையை சேர்த்து அடுப்பில் வைத்து லேசாகச் சூடுபடுத்தி, பின்பு தேய்த்தால் புருவம் எளிதில் வளர துணை புரியும். விளக்கெண்ணெயில் குளிர்ச்சி தன்மை அதிகம் என்பதால், நாம் சூடுபடுத்தி தேய்க்கும் போது, மொத்தமாகப் புருவங்களில் இறங்காது. அதை தவிர, துளசியிலைச் சாறு முடி வளர்ச்சியைத் தூண்டி விடும்.
சில பெண்களுக்குப் புருவ முடிகள் கொட்டுவது போலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும். இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகள் கொட்டுகிற பிரச்னை தீரும்.
புருவங்களின் மீது சொரியும்போது, அந்த இடத்தில் இருக்கும் முடிகள் உதிர்ந்து, புருவ அழகு குறைந்து விடும். இவர்கள், விளக்கெண்ணெயில் இரண்டு வேப்பிலையைப் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதை நன்கு ஆற வைத்து எடுத்து தினந்தோறும் புருவத்திலும், கண் இமையிலும் தடவி மசாஜ் செய்து வந்தால், ஒரு சில நாட்களில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் புருவமும் நன்கு வளர்ச்சி அடையும்.
ரோஸ்மேரி ஆயில்:
புருவ முடிக்கு, ரோஸ்மேரி ஆயில், அதிக வளர்ச்சியைத் தூண்டி விடும் தன்மை அதிகமாக உள்ளது. நிறைய பெண்கள் புருவங்களின் அடர்த்தியான முடிகளே இல்லையென அதிகம் வருந்துவதுண்டு. இந்த ரோஸ்மேரி ஆயிலை நாள்தோறும் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
புருவங்ககளில் உள்ள முடிகள் அடர்த்தியாக இல்லாமல் இருந்தால . அவர்கள், புருவத்தை ஷேப் அல்லது த்ரெட்டிங் மாதந்தோறும் செய்யும் போது , முடிகளின் உள்ள ஃபாலிக்கிள்ஸ் என்ற வேதிப்பொருள் தூண்டப்பட்டு, முடியை அடர்த்தியாகும்.