வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக அதிபர் டிரம்ப் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதே தற்போது எதிரொலிக்கிறது. மோசடி நடப்பதால் தான் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார்.
பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 மாகாணங்களிலும் டிரம்ப்புதான் முன்னிலையில் வகிக்கின்றார். இங்கு மட்டும் 46தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி விஸ்கான்சின்னில் 51.3%, பென்சில்வேனியா 55.7%, மிச்சிகன் 53.3% வாக்குகளும் பெற்று அதிபர் டிரம்ப்பே முன்னிலை வகுக்கின்றார். இங்கு தபால் வாக்குகளை எண்ணும் போது ஜோ பைடனுக்கு அதிகமாக சென்றுவிட்டால் ஜோ பைடன் வெற்றி பெற்று விடுவார் என்று ஒரு காரணத்தினால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த மூன்று மாகாணங்களிலும் தபால் வாக்கு எண்ணிக்கை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்று மாலையோ அல்ல இந்திய நேரப்படி நாளை காலையோ அல்லது ஒரு நாள் கழித்துதான் ஒட்டுமொத்தமான முடிவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமாக ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக கூடிய ஒரு நிலை ஏற்படும் என்ற காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தவும், தேர்தலில் மிகப்பெரிய மோசடி என்ற குற்றசாட்டை டிரம்ப் வைத்துள்ளார்.