Categories
தேசிய செய்திகள்

”ஆன்ட்டி”னு எப்படி கூப்பிடலாம் ? புரட்டி எடுத்த இளம்பெண்… உ.பியில் நடந்த அடிதடி …!!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பாபுகன்ச் மார்க்கெட்டில் நேற்று மாலை இரண்டு பெண்களுக்கிடைய நடைபெற்ற சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாபுகன்ச் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட்  வந்திருந்த 19 வயது இளம்பெண் ஒருவர்  நடந்து  செல்லும் பாதையில் இடையூறாக நின்று கொண்டிருந்த 40 வயது பெண்மணியிடம் ‘எக்ஸ்கியூஸ்மி ஆன்ட்டி’ (Excuse me Aunty) எனக் கூறியுள்ளார். இளம்பெண் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரமடைந்த 40 வயது பெண்மணி, இளம்பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளார்.

இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கூடி வேடிக்கை பார்த்தமட்டுமில்லாமல்  பலர் இந்த சண்டையினை தனது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர்.

பின்னர் இதனை அறிந்த மகளிர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவலர்கள் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான முயற்சியில் ஈடுபடுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினர். மக்கள் அதிகம்கூடும் மார்க்கெட் பகுதியில் இரு பெண்களுக்கு நடந்த இந்த மோதலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு  அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |