Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

05-11-2020, ஐப்பசி 20, வியாழக்கிழமை, நாள் முழுவதும் பஞ்சமி திதி.

நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம்.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

இன்றைய ராசிப்பலன் –  05.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியில் பொருளாதாரம் சீராக இருக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். கடன் தொல்லை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சிறு தொகையை செலவிட நேரும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். பண தேவையில் இருந்து  விடுபட சிக்கனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் குணமறிந்து இருப்பார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை விலகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கக்கூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியம் தள்ளிப்போகும். பெரியவர்கள் பேச்சை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியில் மேலதிகாரிகளை கொடுத்து சென்றாள் உயர்வு கூடும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை சீராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். ஆபரணம் ஆடை வாங்கி மகிழ்வீர்கள்.தொழிலில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.

கன்னி

உங்கள் இராசிக்கு பொருளாதார ரீதியில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து அமைதி பெருகும். உடல் ரீதியில் பாதிப்புகள் குறையும். உத்யோகத்தில் உடன் இருப்பவர்களால் அனுகூல பலன் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனை உத்தியோகத்திற்கு வளர்ச்சியைக் கொடுக்கும். நண்பர்களின் ஆறுதல் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு தொழிலில் பொருளாதார நிலை சற்று மந்தமாகவே இருக்கக்கூடும்.தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க தாமதமாகும். சுபகாரியங்களில் சாதகப்பலன் உண்டாகும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வ வழிபாடு கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளை பேசுவதை தவிர்த்து விடுங்கள்.எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் அதுவே நல்லது. சுப காரியங்களை தவிர்த்து வையுங்கள் அதுவே நல்லது. வெளி பயணங்களில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷமான விஷயங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் உண்டாகும். பண தொல்லை குறைந்து நிம்மதி உண்டாகும்.

மகரம்

உங்கள் இராசிக்கு வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை கூடும். குழந்தைகள் பாசமாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுபச் செலவு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல்நிலை சீராக இருக்கும்.உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருங்கள் அதுவே நல்லது. குழந்தைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் மாற்று கருத்து மன சங்கடம் உண்டாகும். பெண்களுக்கு வேலை பளு நீங்கும்.புதிய யோசனைகள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு சுப செலவுகள் கூடும். குழந்தைகள் படிப்பில் மந்த நிலை உண்டாகும். உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிக்கனமாக இருந்தால் தேவைகள் பூர்த்தியாகும்.

Categories

Tech |