உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள குசிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் என்ற பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மூன்று பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அண்டர் கிரவுண்ட் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.