மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கூடிவரும்.
கணவன் மனைவிக்கிடையே நிதானப் போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள். பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். மூத்த சகோதரரின் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் கொள்ளுங்கள்.
தந்தையாரிடம் அன்பான பேச்சை வெளிப்படுத்துங்கள். இன்று உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் சாதகமான போக்கு காணப்படும். வழக்குகளிலும் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். காலையில் குலதெய்வத்தை வழிபட்டு இன்றைய நாளை நீங்கள் தொடங்க வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்களில் நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்.