அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் அமெரிக்க புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்.
இந்திய நேரப்படி நேற்று மதியத்தில் இருந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் வர தாமதம் ஆகியது. குறிப்பாக அங்குள்ள பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 மாகாணங்களில் மட்டும் 46தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இந்த மூன்று மாகாணங்களிலுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. இந்த மூன்று மாகாணத்திலும் டிரம்ப் முன்னிலை வகுத்தாலும் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் முந்துவார் என தகவல் வந்தன.
நேற்று மதியம் வரை இருந்த முடிவுகளின் வரைபடம்:
அதே நேரத்தில் டிரம்ப் வெற்றி பெறவும், தோல்வி அடையவும் வாய்ப்பு இருப்பதால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது எனவே நீதிமன்றத்தை நாடுவேன் என டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் டிரம்ப் எதிர்பார்த்தது படியே தபால் வாக்குகள் ஜோ பைடனுக்கு கைகொடுத்துள்ளது. இதனால் டிரம்ப் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.
பென்சில்வேனியா தவிர்த்து மீதம் உள்ள விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய இரண்டு மாகாணத்திலும் ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தான் தற்போதைய நிலையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றிக்காக காத்திருக்கின்றார். இன்னும் 6 தேர்தல் சபை வாக்குகள் ஜோ பைடனுக்கு கிடைத்தால் அதிபர் பதவி ஜோ பைடன் வசம் வந்து விடும்.
தற்போதைய தேர்தல் முடிவுகளின் வரைபடம்:
தற்போதைய நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் முன்னிலையில் இருக்கும் 4 மாகாணங்களின் தேர்தல் சபை வாக்குகளை கூட்டினால் 54 கூடுதலாக பெற்று 267 தேர்தல் சபை வாக்குகளை பெறுவார். அதே நேரத்தில் ஜோ பைடன் தற்போதைய நிலையில் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் முன்னிலையில் இருக்கும் 1 மாகாணத்தின் தேர்தல் சபை வாக்குகளை கூட்டினால் 6 கூடுதலாக பெற்று சரியாக 270 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
ஜோ பிடன் முன்னிலை வகிக்கும் மாகாணம்:
நெவாடா:
6தேர்தல் சபையை கொண்ட நெவாடா வில் 75% வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பிடன் 49.3 %, டிரம்ப் 48.7% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
டிரம்ப் முன்னிலை வகிக்கும் மாகாணம்:
அலாஸ்கா:
3தேர்தல் சபையை கொண்ட அலாஸ்கா வில் 50% வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் டிரம்ப் 63.6%, ஜோ பிடன் 32.4% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஜார்ஜியா:
16தேர்தல் சபையை கொண்ட ஜார்ஜியா வில் 97% வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் டிரம்ப் 50%, ஜோ பிடன் 48.8% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நார்த் கரோலினா:
15தேர்தல் சபையை கொண்ட நார்த் கரோலினா வில் 94% வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் டிரம்ப் 50.1%, ஜோ பிடன் 48.7% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பென்சில்வேனியா:
20தேர்தல் சபையை கொண்ட பென்சில்வேனியா வில் 88% வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் டிரம்ப் 51 .4 %, ஜோ பிடன் 47.5% வாக்குகளும் பெற்றுள்ளனர்.