அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் கால தாமதம் ஆக என்ன காரணம் என தெரிய வந்து இருக்கின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டாலும், முடிவுகள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரு வேட்பாளர்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே அதிபராக முடியும்.
தற்போதைய நிலையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த எண்ணிக்கை அசோசியேட்டட் பிரஸ் என்று சொல்லக்கூடிய பாரம்பரியமான செய்தி நிறுவனத்தின் தகவல் அடிப்படையில் வெளியானது. வழக்கமாக 150 ஆண்டுகளாக ஏபி நிறுவனம்தான் இந்த முடிவுகளை மிகத்துல்லியமாக வழங்குகிறது.
தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை சில மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மிக குறிப்பாக பென்சில்வேனியா, நார்த் கரோலினா ஜார்ஜியா, நெவேடா ஆகிய நான்கு மாநிலங்கள் இன்னும் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வில்லை. நேற்றிரவு பென்சில்வேனியா மாநிலத்தில் தேர்தல் அதிகாரி பேசும் போது, லட்சக்கணக்கான வாக்குகள் என்ன படவேண்டி இருக்கின்றன என்று அறிவித்திருந்தார்.
இதே போலதான் நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா உள்ளிட்ட மாநிலங்களும் நிலைமை இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால் ஏராளமான வாக்குகள் தபால் மூலமாக வந்திருக்கின்றன. கடந்த தேர்தலை போல அல்லாமல், முன் எப்போதும் போல் இல்லாமல் இந்த தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கக் கூடிய அந்த நடைமுறையை பயன்படுத்தியத்தில் சுமார் 10 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக 16 கோடி வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 67 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அமெரிக்க தேர்தலைப் பொருத்தவரை வாக்கு பதிவு 50 முதல் 55 – 57 என்ற அளவிற்கு இருந்து வந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி வாக்கு பதிவானது இல்லை. 25 கோடி வாக்காளர்களில் 16 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை பொறுத்தவரை தேர்தல் முடிந்த பிறகும் சில நாட்களுக்கு தபால் மூலமாக பெறக்கூடிய வாக்குகள் எல்லாம் எண்ணி, அதன் மூலமாக தேர்தல் முடிவுகள் வழங்கக்கூடிய அந்த நடைமுறைகள் எல்லாம் இன்னும் உள்ளன. இதன் காரணமாக சில மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது தாமதமாகிறது.