இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சிலிருந்து நேற்று மாலை இந்தியா வந்தடைந்துள்ளன.
இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த பிறகு, இந்திய விமானப் படையில் அவை சேர்க்கப்பட்டன. இந்த நிலையில் விமானப் படைக்கு மேலும் வலு சேர்க்க கூடிய வகையில் மூன்று விமானங்கள் பிரான்சிலிருந்து நேற்று மாலை இந்தியா வந்தடைதுள்ளன.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்று விமானங்களும், மார்ச் மாதத்தில் மூன்று விமானங்களும், ஏப்ரலில் ஆறு விமானங்களும் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.