கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போக்குவரத்து சேவை உட்பட மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான் நீடித்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் மின்சார ரயில் சேவை அனுமதி வழங்கினாலும் கூட அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது நேற்று நள்ளிரவு ஒரு முக்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகையில் பணியாற்ற்றுபவர்களும் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.