Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்… ரயில்வேக்கு பெரும் இழப்பீடு… முடங்கிய ரயில் சேவை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலிருந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்ளிட்ட 32 இடங்களில் விவசாயிகள் அனைவரும் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால மாநிலம் முழுவதிலும் சரக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

அந்த நாட்களில் 1,350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் நிலக்கரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து சேவை தடைபட்டது. அதன் மூலம் ரயில்வேக்கு 1200 கோடிக்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள், தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து உடன் இருப்பதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |