Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில்…. “சுர்ஜித் போல மீண்டும் ஒரு குழந்தை” 2வது நாளாக …. தொடரும் மீட்பு பணி…!!

சிறுவன் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேதுபுரா  கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர்கள் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆழ்துளை கிணறு மொத்தம் 100 அடி ஆழம் கொண்டது. இதில் சிறுவன் எத்தனை அடியில்  சிக்கி இருக்கிறார் என்பதை தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சிறுவனின் குரலை தங்களால் கேட்க முடிகிறது என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கவலை கலந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |