Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அனுமதி கிடையாது…. தமிழக அரசு அதிரடி முடிவு …!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி மற்றும் தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிடினார். அப்போது பாஜக சார்பில் வேல்யாத்திரைக்கு அனுமதி  வழங்க முடியாது என தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞசர் வாதத்தை முன்வைத்துள்ளார்.

Categories

Tech |