கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும், இதன் நன்மைகள்:
கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன
சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. நம்மைப் போன்ற தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கரு வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
கறிவேப்பிலையின் 6 விதமான மருத்துவ பயன்கள்:
கறிவேப்பிலை சாப்பிடுவதால் மற்றும் கறிவேப்பிலை வெளி மருந்தாகப் பயன்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கீழே காணலாம்.
சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:
கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்கள், தலைச்சுற்று, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் தோய்ந்த மலநோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகின்றது. கருவேப்பிலை இலைகளின் செயல் திறனும் இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கின்றன.
தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது:
கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் , பாக்டீரியா எதிர்ப்பொருள் மற்றும் அலர்சி எதிர்ப்பொருள் போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாகப் பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கருவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது.
கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:
கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது. வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை நேரிடலாம். கண்களில் ஏற்படும் குறைபாடுகளில் பார்வை இழப்பு, மாலைக் கண் நோய் போன்றவற்றைக் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளைக் முற்றிலுமாகக் குணம் பெற உதவுகிறது. இதனால் கருவேப்பிலை இலைகளை அதிகம் உன்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கல்லீரலைப் பாதுகாக்கிறது:
கல்லீரல் சேதமடைவதிலிருந்து பாதுகாக்க கறிவேப்பிலை உதவுகிறது. ஏனெனில் கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி உடன் கேம்ப்ரல் பல் என்னும் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் கல்லீரல் சுமூகமாகச் செயல்படுவதற்கு மிகவும் உதவி செய்கின்றன.
கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:
உடலில் குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு உருவாகுவது பெரிய அளவில் குறைக்கப்படலாம் என்பதாகும். கெட்ட கொழுப்பு உருவாகுவதற்குப் பதிலாக உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு அல்லது நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவி செய்கிறது. அதிலும் குறிப்பாகத் தமனித் தடிப்பு அல்லது தமனிக்கூழ்மைத் தடிப்புநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
முடியை வலுவாக்குகிறது:
ஆண்கள், பெண்கள் போன்ற இருபாலருக்கும் முடியின் அடர்த்தி மெலிதல் மற்றும் இளநரைப் போன்றவற்றால் முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதல் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும்.