Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாப்பிட்ட சட்னியே… சாப்பிட போர் அடிக்குதா…இந்த சட்னி மாத்தி பாருங்க…!!!

தினமும் உணவில் கருவேப்பிலையை சேர்த்தால் மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி செய்வது பற்றி காணலாம்:

கருவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை       – 1/2 கப்
தேங்காய்                  – 2 துண்டு (துருவியது)
உளுத்தம் பருப்பு   – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்     –  4
புளி                               – கோலி குண்டு அளவு
கடுகு                            – 2  டீஸ்பூன்
எண்ணெய்                – 3  டீஸ்பூன்
உப்பு                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின் அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

அடுத்தது  மிக்ஸியில் துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வதக்கிய கலவையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு,கறிவேப்பிலை போட்டு அரைத்த கலவையில் ஊற்றி  தாளித்தாள் சூப்பரான மற்றும் சத்தான கறிவேப்பிலை சட்னி தயார்..

Categories

Tech |