கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட இருக்கின்றன.
பிரிட்டனில் Cheshire என்ற இடத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சுமார் 13,500 கோழிகள் கொல்லப்பட இருப்பதாக கோழிப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கென்ட்டில் பறவைக்காய்ச்சல் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் ஐரோப்பாவில் பரவிய பயங்கர வைரஸுடன் தொடர்புடைய வைரஸ் தான் தற்போது கோழிகளை தாக்கியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட கோழிகள் தலை வீங்கி, கழுத்து மற்றும் தொண்டைப் பகுதி நிறம் மாறி, இரை சாப்பிடாமல் இருப்பது, மூச்சுவிட திணறுவது போன்ற அறிகுறிகளுடன் காணப்படும். இதனால் கோழி முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் பாதுகாப்பானது என்று உணவு தரக்கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது.