அரியலூர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறித்தியிருந்தது. அதன்படி தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்த தொடங்கினர். ஆனால் சில அரசு கல்லூரிகளில் மட்டுமே ஆன்லைன் கல்வி முறை உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார துறைத்தலைவர் ஜெயக்குமார் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த வகுப்பில் மொத்தம் 25 மாணவ மாணவிகள் பயிலும் நிலையில் முறையான ஆன்லைன் பாடம் நடத்தப்படாததால் அவர்களது நடப்பாண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இன்று(நவ.5) நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுக்கான கேள்விகள் எந்தெந்த பாடங்களில் இருந்து கேட்கப்படும் என்று கூட தெரியாத சூழ்நிலையில் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் செமஸ்டர் தேர்வில் கேள்வியை பதிலாக எழுதி கல்லூரியில் முதல்வரிடம் மாணவர்கள் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.