நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும்.
அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். கூட்டணி பற்றி பேசிய காலம் இல்லை. மூன்றாவது அணி உருவாக தகுதி வந்து விட்டது. நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். நல்லவர்கள் இங்கே வரவேண்டும் என்பதற்காக ஒரு அழைப்பாக கூட இருக்கலாம். மக்கள் நீதி மையத்தின் தேர்தல் யுக்தி நேர்மைதான். நேர்மை தான் என்னுடைய பலம் என நடிகர் கமல் தெரிவித்தார்.