மசாஜ் வல்லுநர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மெலிந்திருந்தது. எனவே அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மசாஜ் சிகிச்சையை அளிக்க மசாஜ் வல்லுநரான Mark Douglas Elliot(64) என்பவரை அவரின் குடும்பத்தார் நியமித்துள்ளனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலைமையை தெரிந்துக் கொண்ட Mark அந்த பெண்ணிடம் மசாஜ் செய்யும் போது பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு மறதிநோய் இருந்ததால் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இப்படி அவர் மசாஜ் செய்யும் சாக்கில் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்தது பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் ஒருநாள் அந்தப் பெண் தன் குடும்பத்தாரிடம் மசாஜ் செய்பவர் தவறாக நடந்ததை கூறி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் Markகை கைது செய்து உடனடியாக ஜாமீனில் வெளியில் வர முடியாதபடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.