Categories
தேசிய செய்திகள்

பழையதை விட்டு புது வாழ்க்கை….. 5 மாசம் கழித்து நாசமாக்கிய சிறுவன்…. திருமணமான பெண்ணின் நிலை….!!

ஐந்து மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அச்சமயத்தில் அந்த சிறுவன் அதனை காணொளியாக பதிவு செய்து அந்தப் பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டார்.

அதோடு அவருக்கு திருமணம் முடிந்து தனது கணவர் மற்றும் மாமியாருடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுவன் தன்னிடமிருந்த காணொளியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் பார்த்து பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் கணவர் மற்றும் மாமியாருக்கும் இந்த காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த மாமியார் பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

இதனை தொடர்ந்து தனது தாய் வீட்டிற்கு வந்து அந்தப் பெண் வசித்து வந்த நிலையில், அந்த பகுதியிலும் அவரது காணொளி வைரலாகியுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப் பதிந்து சிறுவனைத் தேடி வந்த நிலையில் அவரது செல்போன் மட்டும் காவல்துறையினர் கைக்கு கிடைத்துள்ளது.

Categories

Tech |