தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் எனவும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. டெல்லி போன்ற மாநிலங்களில் காற்றின் மாசு அதிகரித்து வருவதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்துவரும் நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.