மனைவியுடன் தொடர்பிலிருந்த இளைஞனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான தினேஷ் என்பவர் ரவிச்சந்திரன் என்பவர் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் உருட்டுக்கட்டையால் ரவிச்சந்திரன் தினேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனைத்தொடர்ந்து மோட்டூர் ஏரியில் ஜேசிபி உதவியுடன் தினேஷின் சடலத்தை குழிதோண்டி புதைத்த ரவிச்சந்திரன் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து புதைக்கப்பட்ட தினேஷின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரவிச்சந்திரனை சிறையில் அடைத்தனர்.