பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்கள்.
நாடு முழுவதும் தீபாவளி பணிக்கையானது அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் ஒடிஷா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்,
நாட்டிலேயே பட்டாசு என்று எடுத்துக்கொண்டால் சிவகாசியில் இருந்து தான் 90% பட்டாசு உற்பத்தியை கொண்டுள்ளது. பட்டாசு தொழிலை நம்பி நாலு லட்சம் பேருக்கு நேரடியாகவும், நாலு லட்சம் இருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்த வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பட்டாசை நம்பி தான் உள்ளது.
எனவே தீபாவளி பட்டாசு விற்பனை செய்வதற்கும் இரு மாநில அரசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.