Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

14 லட்சம் கொடுங்கன்னு சொல்லியாச்சு…… கோர்ட் பேச்சை கேட்கல…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…..!!

அரசு பஸ் மோதியதில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு பாரதிராஜா என்ற மகனும் இருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரதிராஜா சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பஸ் மோதியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜேந்திரன் போலீசாரிடம் புகார் அளித்தார். பின்பு தனது மகன் இறந்ததால், அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிராஜாவின் குடும்பத்திற்கு ரூபாய்14,72,722 தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்பு உத்தரவினை நிறைவேற்ற கோரி மீண்டும் ராஜேந்திரன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தொகையை வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்ட ஈடு வழங்கப்பட வில்லை.

அதனால் சிறப்பு நீதிமன்ற அமீனா மகாராஜன் கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற சம்பந்தப்பட்ட அரசு  பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். மேலும் அதில் பயணித்த பயணிகளை வேறு பஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |