குடித்துவிட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டத்தில் இருக்கும் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜெகன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெகன் தினமும் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜெகன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்து கம்பி வயிற்றில் குத்தியதாக மருத்துவமனையில் ஜெகனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி குத்திய அடையாளம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் ஜெகன் மற்றும் அவரது தந்தைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் அப்போது அருகில் இருந்த கடையில் இருந்து கத்தியை எடுத்து தந்தை சேகர் தான் ஜெகனை குத்தினார் என்பதும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த ஜெகன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.