Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பது எப்போது?… தொடங்கும் கருத்து கேட்பு கூட்டம்… சமூக இடைவெளி அவசியம்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி ஒன்பதாம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதிலும் குறிப்பாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி ஒன்பதாம் தேதி நடைபெறுகின்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் ஆடைகள் அனைத்தையும் கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும். அதிக அளவு கூட்டம் திரண்டால் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து கருத்து கேட்கப்பட வேண்டும்.

 

Categories

Tech |