நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வர அவர்கள் அழைத்தால் விஜய் வருவார் என்கின்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடிகர் விஜய் தரப்பில் விண்ணப்பிக்க பட்டுள்ளது. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்க பட்டுள்ளது.
இதில் கட்சியின் கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பொருளாளராக தாய் சோபாவின் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் பெயரை விரைவில் அதிகாரபூர்வமாக விஜய் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.