பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மினரல் சத்து, புரதம், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைய காணப்படுகிறன. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளபாக்கும் என்பதால், இதனை கீரைகளின் ராணி என்றும் கூறுவர். இந்த கீரையானது பல விதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.
அதிக குளிர்ச்சியை தர கூடிய கீரைகளில் பொன்னாக்கண்ணியும் ஒன்று. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள், சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணியில் அதிகம் நிறைந்துள்ளது.
பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தும் முறைகளில் சில டிப்ஸ்களை காண்போம்:
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் கண்பார்வை குறைந்தளவில் உள்ளவர்க்கு, எளிதில் பார்வையானது தெளிவாய் தெரியும் அளவுக்கு மிகுந்த சத்துக்களை உடையது.
பொன்னாங்கண்ணி சாப்பிடுவதால் சருமத்துக்கு பொலிவையும், பளபளபையும் தரவல்லது. இந்த கீரையில் குளிர்ச்சி நிறைந்துள்ளதால் இது மூல நோய், மண்ணீரல் நோய்களை குணபடுத்தும் தன்மையை கொண்டது.
இதில் வேதி பொருள்கள் நிறைந்துள்ளதால், ரத்தத்தைச் சுத்தீகரிக்க பெரும் உதவியாக இருக்கும். மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை, வாய் துர்நாற்றத்தை போக்க உதவுவது மட்டுமின்றி இதயத்திற்கும், மூளைக்கும் இடையிலுள்ள நரம்பிற்கு புத்துணர்வு கொடுத்து வலுபெறச் செய்கிறது.
பொன்னாங்கண்ணி கீரையானது சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என 2 வகை உள்ளது . இதில் சீமை பொன்னாங்கண்ணியானது உடம்பில் உள்ள அழகை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் குறைந்த அளவே மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.
இந்தக் கீரையை பகலில் உண்பதால் எளிதில் சேமிக்கும் தன்மையை கொண்டது. பாத்திரத்தில் பொன்னாங்கண்ணி கீரையின் சாறை எடுத்து, அதனுடன் நல்லெண்ணையையும் சேர்ந்து தைலம் போல் காய்ச்சி, தலைக்குத் தடவி சிறிது நேரம் ஊறவைத்து, பின்பு குளித்து வந்தால் கண் எரிச்சல், உடல் உஷ்ணத்தை நீக்கி உடம்பிற்கு குளிர்ச்சியை தரும்.
நாட்டு பொன்னாங்கண்ணியில், பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். பல விதமான நோய்களை குணபடுத்தும் மருந்தாகவும் செயல்படுகிறது.
12 மாதம் முதல் 213 மாத காலம் வரைக்கும், குறைந்தது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால், உடல் சார்ந்த நோய்களை உடனடியாக விரட்டும்.