தமிழகம் முழுவதும் 16 ஆம் தேதி முதல் பள்ளி – கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கும் நிலையில் அரசின் பள்ளி திறப்பு முடிவை அரசு தள்ளிவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெறும் கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும். அதிகமான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து கருத்து கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.