நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கின்றார்.
தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக ( கட்சியாக) பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கொடுத்து விட்டு சான்றிதழும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி வருவார் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் அவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக அவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி இருந்தார். மேலும் சில அரசியல் குறித்து ஆலோசனைகள் எல்லாம் நடைபெற்றது. மேலும் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம், பிற மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களோடும் காணொளி மூலமாக ஆலோசனைகள் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் சற்று முன்பு அடுத்து ஒரு பரபரப்பு நிகழ்வாக விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக விண்ணப்பித்துள்ளார். இது ஒரு தமிழக இது அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.