தனுசு ராசி அன்பர்களே..! அன்பு நண்பர் களின் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.
அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். அஞ்சல் வழியில் அனுகூலம் செய்தி வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் சொத்து தொடர்பான விஷயங்களில் தாமத நிலை உருவாகும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் கொஞ்சம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது கொடுக்கும்.
குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி பேசி எடுக்கும் முடிவுகள் நல்லதைக் கொடுக்கும். பெரியவர்களின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். மாலை நேரங்களில் மனதை மட்டும் கொஞ்சம் ஒரு நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி இப்போ இருக்கிற வேளையில் பயன்படுத்த வேண்டாம்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.