Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை… மீட்பு பணி தீவிரம்… கதறும் பெற்றோர்கள்… மக்கள் பிரார்த்தனை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேதுபுரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், புல்டோசர் வாகனங்களில் உதவியுடன் ஆழ்துளை கிணற்றை நோண்டி குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குழந்தையை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தையின் குரலை மீட்பு குழுவினரால் கேட்க முடிவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் நூறு அடிக்கு கீழ் உள்ளது. ஆனால் குழந்தை எத்தனை அடிக்கு கீழ் சிக்கியுள்ளார் என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அனைவரும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |