Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பணியாளர் தற்கொலை…!!

கே.கே.நகரில்   பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்.

Image result for தற்கொலை

இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எம்.ஜி ஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |