Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

விஜய் புதிய கட்சி ? தந்தை எஸ்ஏசி விளக்கம் …!!

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் புதிய கட்சி தொடங்குவதாக வெளிவந்து இருக்கக்கூடிய தகவலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சி பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி என தெரிவித்துள்ளது.

விஜய் மக்கள் மன்றம் இன்று தொடங்கப்பட்டது அல்ல. உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளேன். எதிர்காலத்தில் இந்த கட்சியில் விஜய் இணைவாரா ? என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என நடிகர் விஜயின் தந்தை புதிய விளக்கத்தை கொடுத்து இருக்கின்றார்.

Categories

Tech |