Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளிக்கு ரூ.2000 – அரசின் இறுதி அறிவிப்பு

வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது.

அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்து ரூ 2000 வழங்குவது குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழக அரசிடம் அப்படி ஏதும் திட்டம் இல்லை. தீபாவளிக்கு ரூபாய் 2000 வழங்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி எனவும், பண்டிகை காலங்களில் யாரும் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Categories

Tech |