Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

புத்துரை, வள்ளிவிலை, சின்னதுரை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 8 மீனவர்கள் வைபர் படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது புத்துரையை சேர்ந்த 32 வயதான பிரடி என்ற மீனவர் படகில் கடலில் தவறி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மீனவரை வேறு படகுகளின் உதவியுடன் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து முகத்துவார பணியில் மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகி வருவது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |