Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு 2000 ரூபாய்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

தீபாவளிக்கு மக்களுக்கு 2000 ரூபாய் அரசு வழங்கும் என்று வெளியான தகவல் வதந்தி என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த பண்டிகையில் இம்முறை கொரோனா பரவிலினாலும் காசு மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்களும் ரூபாயும் வழங்குவது வழக்கம். அதே போன்று தீபாவளி பண்டிகைக்கு அரசு தரப்பில் 2000 ரூபாய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “தீபாவளி பண்டிகைக்கு மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை. அவ்வாறு வெளியான தகவல் வதந்தி தான். பண்டிகை காலத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |