விஜய் தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ரசிகர் மன்றம் விஜய்யின் தந்தையால் தொடங்கப்பட்டது. இது 1993 இல் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றம் என்று அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கினார். அவர் தான் இதற்க்கு உறுப்பினர் சேர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஏ சந்திரசேகருக்கும், விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யும் கூறியிருக்கிறார். இருந்தாலும் அந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்த விஜய்யின் மூத்த ரசிகர்கள் சிலர் எஸ்ஏ சந்திரசேகருடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அமைப்பில் சில வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மக்கள் இயக்கத்தை நான் வலுப்படுத்தி வருகிறேன் என்று எஸ்.ஏ சந்திரசேகர் கூறினார். அதற்க்கு பிறகு நடிகர் விஜய் ரசிகர் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். இந்த நிலையில் தான் தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் யாரும் சேரவேண்டும். அதற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை என விஜய் தெரிவித்துள்ளார்.