மதுக்கடை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 8.33 சதவீதமாகவும் மற்றும் கருணைத்தொகை 1.6 சதவீதமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
இந்த போனஸ் தொகையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.