Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கொடுப்பதற்காக பிச்சை எடுத்த கிராம மக்கள் …!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடுத்தாவை நத்தம் கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் பெரியாபிள்ளை முதியோர் விதவை உதவி தொகை பெற்று தர லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாங்கிய லஞ்ச பணத்தை திரும்ப வழங்க கோரியும் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரியும் எடுத்தாவை நத்தம் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |